ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

நாகை (வடக்கு) மாவட்டம் நடத்திய இப்தார் விருந்து 2009

                                                    அல்லாஹ்வின் திருப்பெயரால்

அன்புடையீர்...  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

18 செப்டம்பர் 2009 அன்று வெள்ளிக்கிழமை மாலை மயிலாடுதுறையில் உள்ள நாகை (வடக்கு) மாவட்ட தலைமை மர்கஸில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இப்தார் விருந்து  ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 150 ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் இதில் சிறப்பு விருந்தினர்களாக நாகை மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பின் ரியாத் மண்டல பொதுச் செயலாளர் சகோதரர் அறங்கக்குடி ஹபிபுல்லா, மற்றும் செயலாளர்கள் நாகை ஷரிப், எலந்தங்குடி பரித் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.  இதில் இறை அச்சம் என்ற தலைப்பில் கொல்லுமாங்குடியைச் சேர்ந்த சகோதர்ர் வ்சாத் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்

இப்படிக்கு,

H.M. புகாரி,
நாகை (வடக்கு) மாவட்ட தலைவர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மயிலாடுதுறை.

ஃபித்ரா வசூல் சமுதாயச் செய்திகள்)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

நாகை (வடக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த ஆக்கூர் கிளையில் கொடுக்கப்பட்ட ஃபித்ரா 2009 ஆண்டிற்கான தொகைகள்.

தலைமை மூலம் வரவு ரூபாய் 7,000.00

உள்ளுர் வசூல் ரூபாய் 13,180.00

மொத்த வரவு ரூபாய் 20,180.00

ஆக்கூர் கிளையில் மொத்தம் 64 நபர்களுக்கு பொருளாக கொடுக்கப்பட்டது


இங்கணம்,

H.M. புகாரி,

தலைவர்,

நாகை வடக்கு மாவட்டம்.


மயிலாடுதுறை நகரத்தில் வழங்கப்பட்ட ஃபித்ரா 2009

அன்புடையீர்

           

                        அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

 

நாகை (வடக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த மயிலாடுதுறை நகரத்தில் கொடுக்கப்பட்ட ஃபித்ரா 2009 ஆண்டிற்கான தொகைகள்.

 

தலைமை மூலம் வரவு               ரூபாய் 10,000.00

உள்ளுர் வசூல்                       ரூபாய்  7,835.00

 

மொத்த வரவு                        ரூபாய் 17,835.0

 

மயிலாடுதுறை நகரத்தில் மொத்தம் 75 நபர்களுக்கு பொருளாகவும், 2535 ரூபாய்க்கு பணமாகவும் கொடுக்கப்பட்டது. கொடுக்கப்பட்ட பொருட்களின் விபரங்கள் கீழ்வருமாறு.

 

அரிசி                   4 கிலோ.

ஆயில்            ½ லிட்டர்.

மைதா            ½ கிலோ.

து.பருப்பு          ¼ கிலோ.

ஜீனி              ½ கிலோ.

மேரி பிஸ்கட்      1 பாக்கெட்.

ஜவ்வரிசி          200 கிராம்.

டால்டா நெய்      100 கிராம்.

முந்திரி, திராட்சை  10 ரூபாய்.

சேமியா           200 கிராம்.

 

இப்படிக்கு,

M. ஜெஹபர் சாதிக், நகரச் செயலாளர் – மயிலாடுதுறை.


மயிலாடுதுறையில் நடைபெற்ற பெருநாள் தொழுகை 2009


அல்லாஹ்வின் திருப்பெயரால்...


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், நாகை (வடக்கு) மாவட்ட தலைமை மர்கஸில் (மயிலாடுதுறை) ரமளான் பெருநாள் தொழுகை அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால் சிறப்பாக நடைபெற்றது. தொழுகை காலை 8:00 அளவில் ஆரம்பிக்கப்பட்டது. தொழுகை மற்றும் குத்பா உரையை நாகை (வடக்கு) மாவட்ட தலைவர் சகோதரர் H.M. புகாரி அவர்கள் நடத்தினார்கள். இத்தொழுகையில் சுமார் 400ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துக் கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

இப்படிக்கு,

H.M. புகாரி,
நாகை (வடக்கு) மாவட்ட தலைவர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
நாகை வடக்கு மாவட்டம்.

வெள்ளி, 25 செப்டம்பர், 2009

நல்வரவு

அன்புடையீர்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், நாகை வடக்கு மாவட்டம் எங்களின் வலைதளத்திற்கு உங்களை அன்புடன் அழைக்கின்றது. இன்ஷாஅல்லாஹ் வருகின்ற காலங்களில் எங்கள் மாவட்டத்தின் தவ்ஹீத் எழுச்சிப் பணிகளை இவ்வலைதளத்தில் காணலாம்.

ஜெசக்கல்லாஹூ ஹைரன்.

இங்கணம்,

H.M. புகாரி,
நாகை வடக்கு மாவட்டம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.